டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

Published : Oct 30, 2026, 09:02 PM IST

டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை ₹10 உயர்த்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு அமைச்சர் கே. விக்னேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். முந்தைய ஆட்சிக் காலத்தில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற தனியாக பெறப்பட்ட ₹10 வைப்புத் தொகை, அரசு கணக்கில் வராமல் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பணத்தை அரசு கஜானாவிற்கு நேரடியாகக் கொண்டு வரும் நோக்கிலேயே அது தற்போது MRP தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மதுப்பிரியர்கள் காலி பாட்டில்களைச் சில்லறை விற்பனைக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த ₹10 தொகை முழுமையாக அவர்களுக்கே திரும்ப வழங்கப்படும் என்றும், இதில் புதியதாக விலை உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

07:14மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
03:33டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
05:15ஐயா முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை ! - மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
02:48மின் தட்டுப்பாடு, ₹6,000 கோடி உபகரணங்கள் வீணடிப்பு: TVK அரசை கடுமையாக தாக்கிய மு.க.ஸ்டாலின்!
03:17பசும்பொன் தேவர் குருபூஜை: வைகோ நேரில் மலரஞ்சலி!
04:52இந்த ஆட்சி எப்போ ஒழியும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர் - பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு !
09:45சட்டம் ஒழுங்கு சீர்கேடு... சோப்ளாங்கி அரசு" - முதலமைச்சர் விஜய்யை கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்!
04:42நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் விஜய் மரியாதை !
05:51தேவர் ஜெயந்தி விழா: மலர் தூவி மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்!