கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்... டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!!

By Narendran S  |  First Published Dec 6, 2022, 10:54 PM IST

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக தமிழகத்தில் 852 டாஸ்மாக் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக தமிழகத்தில் 852 டாஸ்மாக் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஜி20 தலைமை.. தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.! பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் !!

Tap to resize

Latest Videos

இதை அடுத்து 2 ஆயிரத்து 822 பேர் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதன்படி, 852 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனர். மேலும் இந்த புகாருக்கு துணை போன ஆயிரத்து 970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 196 நாடுகளின் தேசிய கீதம் பாடிய 12 வயது சிறுமி… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து!!

இதுமட்டுமின்றி கூடுதல் விலைக்கு  மதுவை விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடமிருந்து 4.61 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பார் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் சட்டவிரோதமாக பார் நடத்தியதாக கூறி 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு ஆயதீர்வத்துறை அமைச்சர் செந்தில் பாலஜி தகவல் தெரிவித்துள்ளார். 

click me!