ரூ.290 கோடி வருமானத்தை மறைத்த ரேசன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் நிறுவனம்… வருமான வரித்துறை தகவல்!!

By Narendran SFirst Published Dec 6, 2022, 7:53 PM IST
Highlights

ரேசன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்த நிறுவனங்கள் 290 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

ரேசன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்த நிறுவனங்கள் 290 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ரேசன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்த 5 நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

இதையும் படிங்க: கார்த்திகை தீபம் எதிரொலி… கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு!!

மேலும் அந்த சோதனை குறித்து வருமானவரித்துறை அறிக்கையும் வெளியிட்டது. அதில், கடந்த 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளது. போலியான ரசீதுகளை தயாரித்து பல கோடிகளுக்கு விற்பனை நடந்தது போல கணக்கு எழுதப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்… விண்ணை முட்டும் பக்தர்களின் அரோகரா முழக்கம்!!

இன்டகிரேட்டட் சர்வீஸ் ப்ரொவைடர் நிறுவனம் ரூ.150 கோடி வருமானத்தை மறைத்ததும், பெஸ்ட் தால் மில் நிறுவனம் ரூ.80 கோடி வருமானத்தை மறைத்ததும், அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனம் ரூ.60 கோடி வருவாயை மறைத்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5 நிறுவனங்கள் ரூ.290 கோடி வருமானத்தை மறைத்தது சோதனையில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!