காவி உடையில் அம்பேத்கர்.. போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகியை அலேக்காக தூக்கிய போலீஸ்.!

By Raghupati RFirst Published Dec 6, 2022, 4:31 PM IST
Highlights

சர்ச்சைக்குரிய அம்பேத்கர் போஸ்டரை ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இதனை அறிந்த பிற கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீஸாருக்கு தகவல் அளித்தையடுத்து, போலீசார் மாற்று உடையில் போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க..தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !! 

கும்பகோணம் நகர்பகுதி முழுவதும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், பல இடங்களில் அவை கிழிக்கப்பட்டது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை- குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என கூறினார். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அம்பேத்கர் போஸ்டரை ஒட்டிய,இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க..முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!

இதையும் படிங்க..இமாச்சலபிரதேசத்தில் 37 வருட சாதனையை உடைக்கும் பாஜக! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு சொல்வது என்ன ?

click me!