படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்… கை கொடுத்த தமிழக அரசு….

By manimegalai aFirst Published Oct 14, 2021, 8:02 PM IST
Highlights

காஞ்சிபுரத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும், பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு அரசு வேலையும் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும், பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு அரசு வேலையும் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் என்பவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த படுகொலைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் கடந்த 5ம் தேதி போராட்டமும் நடத்தினர்.

இந் நிலையில் காஞ்சிபுரத்தில் தாக்குதலில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.

click me!