நீங்க நல்லாயிருப்பீங்க… டாஸ்மாக் செஞ்ச காரியம்… மகிழும் குடிமகன்கள்…

By manimegalai aFirst Published Sep 23, 2021, 8:05 AM IST
Highlights

மதுபான விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை: மதுபான விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எங்கே எது நடந்தாலும்… நடக்காவிட்டாலும் சரி… தமிழகத்தில் ஒரு விஷயம் மட்டும் எப்படியாவது நடந்து கொண்டே இருக்கும். அதுதான் மதுபானங்கள் விற்பனை. மதுவால் பல குடும்பங்கள் இன்னமும் சீரழிந்து கொண்டு இருந்தாலும் மதுகுடிப்போர் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை.

இந் நிலையில் மதுபானங்கள் விற்பனைக்கு பற்றுச்சீட்டு ரசீது பில் புத்தகம் மூலமாக கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்று ஸ்டிரிக்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க வரும் வாடிக்கையாளர்கள் கண்ணில்படும்படி விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மதுபான விற்பனைக்கு பற்றுச்சீட்டு ரசீது பில் புத்தகத்தின் மூலம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

இது முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட மேலாளர்கள் ஆய்வு நடத்தி கண்காணிக்க வேண்டும். அப்படி செய்யாத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

click me!