ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு... புதிய தேதிகள் அறிவிப்பு... முழு விவரம் உள்ளே!!

Published : May 25, 2023, 08:12 PM IST
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு... புதிய தேதிகள் அறிவிப்பு... முழு விவரம் உள்ளே!!

சுருக்கம்

நாளை (மே 26) நடைபெற இருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (மே 26) நடைபெற இருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 8 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதற்காக ஏற்கெனவே ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழலில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: குமரியில் சொகுசுப் படகு சவாரி ஆரம்பம்! படகு இல்லத்திலிருந்து வட்டக்கோட்டை வரை இயக்கம்!

இதன் காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது. இதற்கிடையே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. எனினும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு.. பலத்த காற்றுடன் மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

இந்த நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு  நாளை (மே 26) நடைபெறுவதாக இருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2022- 2023 ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ சார்பாக திருத்திய கால அட்டவணைகள்‌ வெளியிடப்பட்டது.

வரிசை எண்‌இயக்ககம்‌ பதவிஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு நாள்திருத்திய கலந்தாய்வு தடைபெறும்‌ நாள்
1தொடக்கக் கல்வி இயக்ககம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு
26.05.2023  
 29.05.2023
2தொடக்கக் கல்வி இயக்ககம்இடைநிலை ஆசிரியர்‌ மாறுதல்‌ கலந்தாய்வு ( ஒன்றியத்திற்குள்‌)

 

 29.05.2023  

‌30.05.2023 


தற்போது தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌ சார்பாக கீழ்க்காணும்‌ திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெறும்‌ என்பதை அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ (தொடக்கக்‌ கல்வி) தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்