திடீரென சரிவை சந்திக்கும் தமிழக டாஸ்மாக்.. கர்நாடகாவின் பார்முலாவை கையாளுமா தமிழகம்?

தமிழக டாஸ்மாக்களில் நாள்தோறும் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதில் சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.


வரலாறு காணாத விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனையின் அளவு 25 சதவிகிதம் குறைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அமைச்சர் தலைமையில் தற்பொழுது சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் சுமார் 5300க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது, இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மக்களுக்கு இடையூறாகவும், வேறு விதத்தில் பிரச்சனையாகவும் இருக்கும் 500 கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. 

Latest Videos

சென்னைக்கு திடீரென வந்த அமெரிக்க கடற்படை கப்பல்..! கடற்படை தளம் அமைக்க திட்டமா.?- வெளியான பரபரப்பு தகவல்

இந்நிலையில் தமிழக டாஸ்மாக்களில் நாள்தோறும் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதில் சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த விகித வீழ்ச்சியால் அரசு மதுபான கடைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. 

இதை சீர் செய்ய இன்று அதிகாரிகள் மற்றும் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுது. இந்நிலையில் கர்நாடகாவை போல தமிழகத்திலும் மதுபானத்தை டெட்ரா வகை பாக்கெட்களில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

காலி மதுபாட்டில்களுக்கு கிடைக்கின்ற மதிப்பு கூட தேங்காய்களுக்கு இல்லை - விவசாயிகள் வேதனை

click me!