இந்த 7 மாவட்டங்களில் இன்னிக்கு இருக்கு… மக்கள் கவனம்… வானிலை மையம் வார்னிங்

By manimegalai aFirst Published Oct 2, 2021, 8:06 AM IST
Highlights

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. வேலூர், கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமைழை கொட்டியது. தென் மாவட்டங்களிலும் மழை பதிவானது.

இந் நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் தீவிர கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கோவை, ஈரோடு, நாமக்கல், அரியலூர், கரூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். நாளையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்யும். சென்னையில் நகரின் சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

click me!