#BREAKING : தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடி தடை.. திருமண விழாக்களில் பரிமாறினால் நடவடிக்கை!

By vinoth kumarFirst Published Feb 17, 2024, 11:34 AM IST
Highlights

விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 பிரிவு 3(1) (ZX) பிரிவு 3 (1 ) (zz)(iii) (v) (viii) & (xi)மற்றும் 26(1) (2) (ixii) & (v) – ன் படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி.. என்ன காரணம் தெரியுமா?

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்கள்.

இதையும் படிங்க:  Today Gold Rate in Chennai: கிடுகிடுவென உயரும் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! இன்றைய நிலவரம் என்ன?

click me!