அதானி நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்த தமிழ்நாடு அரசு; காரணம் என்ன?

By Rayar r  |  First Published Dec 31, 2024, 11:02 AM IST

ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான அதானி நிறுவனத்தின் டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. புதிய டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மின் பயன்பாடு

தமிழ்நாட்டில் வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மீட்டரில் பார்த்து, பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு, அதற்கான கட்டணம் போனற விவரங்களை மின் கணக்கீட்டு அட்டையில் குறித்து விட்டு செல்கின்றனர்.

Tap to resize

Latest Videos

வீடுகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' 

இந்நிலையில், மின்வாரிய ஊழியர்கள் வீடுதோறும் மின் பயன்பாட்டு கணக்கு எடுக்கும் முறையை தவிர்க்கும் வகையில், வீடுகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தினால் மின்வாரிய ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு வீடுகளிலும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மின்வாரியத்தின் சர்வர் மூலமாக பார்த்து மக்களுக்கு செல்போன் எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவித்துக் கொள்ள முடியும்.

டெண்டர் விடப்பட்டது 

முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டு இருந்தது. சுமார் 3.03 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது. இந்தியாவின் 4 நிறுவனங்கள் இந்த டெண்டர் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. இதில் அதானி நிறுவனமும் அடங்கும். அதானி நிறுவனம் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து டெண்டர் கோரி விண்ணப்பம் செய்திருந்தது. 

அதானி நிறுவனத்தின் டெண்டர் ரத்து 

இந்நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்வதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் கோரிய டெண்டர் தொகை மின்வாரிய பட்ஜெட்டிற்கு அதிகமாக இருப்பதால் இந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் மீண்டும் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானிக்கு ஆதரவாக இருந்தாரா ஸ்டாலின்?

உலக அளவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அதானி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிருந்தன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு அதானிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், டெண்டர் ஒதுக்கியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் அதானி நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதானியை தான் சந்திக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலினும் மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!