Fishermen Arrest: அடங்காமல் அடாவடி செய்யும் இலங்கை கடற்படை! தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பால் அதிர்ச்சி!

By vinoth kumar  |  First Published Mar 21, 2024, 8:35 AM IST

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இலங்கை கடற்படையின் அடாவடிதனத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வலைகளை தேசப்படுத்தி வருகின்றனர். 

Latest Videos

இந்நிலையில் நெடுந்தீவு, மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!