IT RAID : ஜி ஸ்கொயர் நிறுவனத்தை சுற்றி வளைத்த வருமான வரித்துறை.. திடீர் சோதனையால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Mar 21, 2024, 8:29 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தமிழகத்தில் முக்கியமான ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனமாக ஜி.ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


மீண்டும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனம் 2017 முதல் 2020 வரை மிகவும் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாக புகார் வந்தது. இதனையடுத்து இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

எங்கெல்லாம் வருமான வரித்துறை சோதனை.?

இந்தநிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை சென்மேரிஸ் சாலையில் உள்ள ஏழு மாடி கண்ணாடி கட்டிடமான ஜீ ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையை நடத்தி வருகின்றனர். ஜீ ஸ்கொயர் நிறுவனம் ஆளும் திமுகவிற்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.  இதன் நிர்வாக இயக்குனராக லோட்டஸ் பாலா என்பவர் உள்ளார்.

இந்தநிலையில் சென்னையில் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, அடையாறு, அமைந்தகரை, அண்ணா நகர், உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் உட்பட 10 - க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்தில் சென்னை நந்தனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைநடத்தி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

ஒரே ஒரு தொகுதி.!தாமரை சின்னத்தில் தான் போட்டி.!உறுதியாக நிற்கும் பாஜக.?கெத்து காட்ட முடியாமல் தவிக்கும் ஓபிஎஸ்

click me!