சொந்த வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கரா...? டிஜிபி போட்ட உத்தரவால் அதிர்ச்சியான காவலர்கள்

By Ajmal KhanFirst Published Jul 19, 2022, 10:57 AM IST
Highlights

 காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற  ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

சொந்த வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர்

காவல்துறை உங்கள் நண்பன் எனக்கூறுவார்கள் ஆனால் ஒரு சில காவலர்களை பார்த்தால் ஜெய்பீம் படமும், விசாரணை படமும் தான் நினைவுக்கு வரும் அந்தளவிற்கு போலீஸ் மட்டுமல்ல போலீஸ் என ஒட்டப்பட்டிருக்கும் வாகனத்தை பார்த்தால் பயப்படுவார்கள். இந்தநிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தங்களது அலுவலக வாகனத்திலும்  மற்ற சொந்த கார் மற்றும் பைக்குகளில்  POLICE என்ற ஸ்டிக்கரை ஒட்டியிருப்பார்கள் அந்த ஸ்டிக்கரை பார்த்து பலர் பயந்து ஓரமாக செல்வதும் உண்டு. இந்தநிலையில் இதற்க்கு தான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், காவல்துறை பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக்கூ

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்:பள்ளிக்கு விடுமுறை அளித்தது ஏன்..? விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு

கல்லூரி மாணவர் திடீர் மரணம்...! ஆன்லைன் மூலம் போதை மருந்து விற்ற கும்பலை தட்டி தூக்கிய போலீஸ்

போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற டிஜிபி உத்தரவு

நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தற்போது அனைத்து காவல்து றை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என கூறியுள்ளார். காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அலுவலக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். எனவே தனிப்பட்ட சொந்த வாகனத்தில் போலீஸ் போர்டை பயன்படுத்தி வந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டவர், உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும்படி அனைத்து பகுதி காவல் ஆணையர்கள், ஐஜி மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கு சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி முதல்வர் அறையில் ஆணுறை வந்தது எப்படி..? மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகிகள் பதில்

 

click me!