தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... முதல்வர் மீண்டும் ஆலோசனை.. ஊரடங்கிற்கு வாய்ப்பா...?

By Raghupati RFirst Published Jan 5, 2022, 2:03 PM IST
Highlights

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்திருந்த நிலையில்,  கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ஒமிக்ரான் தொற்றும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென மத்திய அரசு,  மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்திலும் கடந்த 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது.  

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. சென்னை கலைவாணர் அரங்கில்  சுகாதாரத்துறை  அமைச்சர்,  செயலாளருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.  கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில்,  கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், கூட்டத்திற்குப் பின் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.  

அத்துடன் பொங்கல் பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,  இரவு நேர ஊரடங்கு,  வழிபாட்டு தலங்களில் வார இறுதிநாட்களில் தடை உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

click me!