"யோவ் முதல்ல பணத்தை கட்டிட்டு சாவுங்க"... போனில் திமிராக பேசி விவசாயியை தற்கொலைக்கு தூண்டிய பெண் ஊழியர்.!

By vinoth kumarFirst Published Jan 5, 2022, 1:34 PM IST
Highlights

இந்தியன் வங்கியில்  30,000 ரூபாய் விவசாய கடன் பெற்றுள்ளார். இந்த கடனை வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்தின் பெண் அதிகாரி ஒருவர் விவசாயியை மிரட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. கடனை வசூலிக்க அடாவடியாக பேசிய அவர் தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்திருக்கிறார். 

விழுப்புரம் அருகே வங்கி கடனை வசூலிக்க விவசாயிடம் தற்கொலைக்கு தூண்டும் வகையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன் (65). விவசாயி. இந்திய விவசாய முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர். இவர், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள இந்தியன் வங்கியில்  30,000 ரூபாய் விவசாய கடன் பெற்றுள்ளார். இந்த கடனை வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்தின் பெண் அதிகாரி ஒருவர் விவசாயியை மிரட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. கடனை வசூலிக்க அடாவடியாக பேசிய அவர் தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்திருக்கிறார். 

அவர்களது உரையாடல் வருமாறு:

பெண் ஊழியர்: ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி.,யில் இருந்து பேசுறேன் சார். நீங்க பேங்க்ல லோன் எடுத்து இருக்கீங்களா?

விவசாயி:  இந்தியன் வங்கியில் லோன் எடுத்திருந்தால் இருக்கேன். உங்களுக்கு என்ன?

ஊழியர்: ஏன் உங்களுக்கு சொல்லலையா, உங்க பேங்க்ல ரிலையன்ஸ்க்கு பார்வர்டு பண்ணிட்டாங்கன்னு.

விவசாயி: அது எப்படி அந்த பேங்க்ல கடன் வாங்குனா ரிலையன்சுக்கு பார்வர்டு பண்ணுவாங்க. யார் கடன் கொடுக்கிறது. யார் கேட்கிறது?

ஊழியர்: நீங்க வருஷக்கணக்கா கட்டாம ஒக்காந்து இருப்பீங்க. நாங்க கேட்க கூடாதா. நீங்க எங்களுக்குத்தான் பதில் சொல்லியாகனும்.

விவசாயி: உன்கிட்ட கடன் வாங்கல. உன்கிட்ட வாங்குனா தான் உனக்கு பதில் சொல்லணும்.

ஊழியர்: நீங்க கிளம்பி வாங்க முதல்ல, இந்த ரூல்ஸ்லாம் பேங்க்ல வந்து பேசுங்க.

விவசாயி: நீ வைமா போனை, நீ ஏன் எனக்கு போன் பண்ற?

ஊழியர்: யோவ் நான்தான்யா கால் பண்ணனும். பேங்க்குக்கு வா. முதல்ல இந்த லா எல்லாம் பேசிட்டு இருக்காத.

விவசாயி: என்னது யோவ் வா...? இரு கலெக்டர்கிட்ட பேசிட்டு வர்றேன்.

ஊழியர்: என்னது கலெக்டர் கிட்ட போறியா. போய் குடு போ. என்னோட பேரு அஸ்வினி தான் போய் சொல்லு போ.

விவசாயி: உங்க கிட்ட கடன் வாங்குனா சாவ சொல்றீங்களா?

ஊழியர்: செத்தாக்கூட கடன கட்டிட்டு செத்து போங்க பரவாயில்லை. கடன கட்டிட்டு சாவுங்க.

விவசாயி: வா வா நீ தான வசூல் பண்ணுவ வா.இந்த உரையாடல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடனை வசூலிக்க முயன்ற பெண் ஊழியரின் ஆடியோ விவசாயிகளுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

click me!