காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றங்கரையில் பள்ளி மாணவர்கள் இருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆணவக் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன் மகள் நிவேதா(16). இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் ஹரிகிருஷ்ணன்(16). இருவரும் ஒன்றாக அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். பிளஸ் 2 படிக்கும் மாணவனும், மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:- ஆசை ஆசையாய் நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற கணவர்.. தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!
இந்நிலையில், கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாணவி நிவேதா கடந்த 20-ம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனைக் கொண்டு போலீசார் மாணவியைத் தேடி வந்தனர்.
இதையும் படிங்க:-என்னோட ஆசைக்கு இணைங்கினால் மட்டுமே உனக்கு அது கிடைக்கும்.. அமமுக பிரமுகர் மீது குவியும் பாலியல் புகார்..
இதனிடையே இன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார்குடி கோமுகி ஆற்றங்கரைப் பகுதியில் மாணவன் ஆற்றுப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையிலும், மாணவி ஆற்றுப் பகுதியில் மிதந்த படியும் சடலமாக இருப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் இருவரும் ஆணவக் கொலையா? இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் ஏற்படும் என நினைத்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.