கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் அருகே சரவணா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் அருகே இந்த ஹோட்டல் இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு சாப்பிடுவது, பார்சல் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பல்லி விழுந்த உணவை சாப்பட்டதால் 2 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் அருகே சரவணா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் அருகே இந்த ஹோட்டல் இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு சாப்பிடுவது, பார்சல் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- எங்களுக்கு வெட்டிய குழியில் நாங்கள் மட்டும் விழப்போதில்லை.. நீங்களும் விழப்போகிறீர்கள்.. எச்சரிக்கும் ராமதாஸ்
இந்நிலையில், இன்று மதியம் சங்கராபுரம் அடுத்த பாண்டலம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர் மனைவி கலைவாணி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சரவணா ஹோட்டலில் லெமன் சாதம் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பசியில் இருந்த இரு குழந்தைகளும் லெமன் சாதத்தை சாப்பிட்டுள்ளனர். குழந்தைகள் மீதி வைத்த சாப்பாட்டை சிவபாலன் சாப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவருக்கு இன்னும் சாப்பாடு கொடுப்பதற்காக கலைவாணி இன்னொரு பார்சலை பிரித்துள்ளார். அதில் பல்லி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க;- பாஜக வழியில் செல்லுங்கள்.. முதல்வர் ஸ்டாலினை நெருக்கும் ஓபிஎஸ்..!
பல்லி விழுந்த லெமன் சாதத்தை சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த பின்னர் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகளை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை பல்லி கிடந்த லெமன் சாத பார்சலுடன் ஹோட்டலுக்கு சென்று முறையிட்டுள்ளார். அதற்கு அவர்கள் தெரியாமல் நடந்துவிட்டது என்று அலட்சியா பதில் அளித்துள்ளனர். பேசிக்கொண்டிருந்த போதே லெமன் சாதம் சாப்பிட்ட சிவபாலனும் மயங்கினர். உடனே அவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- வெட்கமா இல்ல.. என் புருஷனுக்கு நீ ஏண்டி இப்படி அலையறே? வீட்டுக்கு வந்த தோழியால் ரோட்டுக்கு வந்த குடும்பம்.!
உடனே இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவபாலன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதனிடையே, அந்த ஹோட்டலை மூட வட்டாட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.