புதுச்சேரி வீராம்பட்டிணம் காக்காயந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன்(34). நாட்டு வெடிகள் தயாரித்து, விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி ரூபனா. மகன் பிரதீஷ் (8). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் நேற்று காலை வீராம்பட்டிணத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு, மரக்காணம் அடுத்த கூனிமேட்டிற்கு சென்றனர். அங்கு பட்டாசுகளை விற்ற பின், மீதியுள்ள பட்டாசு மூட்டைகளுடன், புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
விழுப்புரம் அருகே நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் ஸ்கூட்டரில் சென்ற தந்தையும், மகன் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடினர். சில இடங்களில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில், புதுச்சேரி வீராம்பட்டிணம் காக்காயந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன்(34). நாட்டு வெடிகள் தயாரித்து, விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி ரூபனா. மகன் பிரதீஷ் (8). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் நேற்று காலை வீராம்பட்டிணத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு, மரக்காணம் அடுத்த கூனிமேட்டிற்கு சென்றனர். அங்கு பட்டாசுகளை விற்ற பின், மீதியுள்ள பட்டாசு மூட்டைகளுடன், புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- 4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார் விபத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..!
அப்போது, இ.சி.ஆரில் சின்னக் கோட்டக்குப்பம் அருகே கலைநேசன் வந்து கொண்டிருந்த போது மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்துளார். இதனால், நிலைதடுமாறி கலைநேசன் கீழே விழுந்தார். அப்போது, உராய்வு ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நாட்டு வெடிகள் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்து சிதறியது.
இதையும் படிங்க;- இளஞ்சிட்டை பார்த்ததும் பத்திக்கிச்சு.. 20 வயது பெண்ணை கரெக்ட் செய்து உல்லாசமாக இருந்த தோழியின் கணவர்.!
இந்த கோர விபத்தில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், சிறுவனின் உடல் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இருவரின் உடல்பாகங்கள் அங்காங்கே சிதறி கிடந்தன. விபத்து நடந்த இடத்தில் லாரியின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டழ. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!
தீபாவளி தினத்தன்று தன் கணவரும், மகனும் உடல் சிதறி உயிரிழந்த செய்தியை அறிந்த தாய் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் பகுதியில் நாட்டு வெடிகள் தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் இருந்து நாட்டு வெடிகளை தயாரித்து, தமிழக பகுதியில் திருட்டுத் தனமாக விற்படுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.