விழுப்புரம் மாவட்டம் அடுத்துள்ள திருக்காமுநகரை சேர்ந்தவர் தயாளன்(40). இவர் பனையபும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது தாய் முத்தாலம்மாள்(67) சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றார் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது மகன் தாய்மாமன் மகளை திடீரென திருமணம் செய்துகொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் அடுத்துள்ள திருக்காமுநகரை சேர்ந்தவர் தயாளன்(40). இவர் பனையபும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது தாய் முத்தாலம்மாள்(67) சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றார் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க;- அதிமுக அரசு சொன்னதால் தான் சிசிடிவியை அகற்றினோம்.. உச்சநீதிமன்றத்தில் ஒரேபோடு போட்ட அப்பல்லோ.!
தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் தனது தாயை மகன் தயாளன் பார்க்க சென்றார். அப்போது, தாய் முத்தாலம்மான் உனக்கு கடைசி வரை திருமணம் செய்து பார்க்க முடியாமல் போய்விட்டதே என வேதையனையுடன் புலம்பியுள்ளார். உனக்கு திருமணம் செய்து வைப்பதே எனது கடைசி ஆசை என உருக்கமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- நம்பாதீங்க.. இந்த விஷயத்தில் நாடகமாடுகிறார்.. ஓபிஎஸ் முகத்திரையை கிழிக்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி..!
இதை கேட்ட மகன் தயாளன், தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் தனது தாயைப் பார்க்க வந்திருந்த கோனூரை சேர்ந்த தாய்மாமன் ஏழுமலை என்பவரின் மகள் காயத்திரியை(27) திருமணம் செய்து கொள்ள உறவினர்கள் மத்தியில் பேசி முடிவு செய்தார். இதையடுத்து மருத்துவமனை உள்ள ஒரு கோயிலில் மணமகள், மணமகள் மாலை மாற்றிக் கொண்டனர்.
இதையும் படிங்க;- ஜெயலலிதாவுடன் சசிகலா இதற்காக தான் பழகினாரா? பொசுக்குனு இப்படி சொல்லிட்ட கே.பி.முனுசாமி..!
இதனையடுத்து, அம்மன் முன்னிலையில் மணமகள் காயத்திரி கழுத்தில் தாலி கட்டி, குங்குமம் இட்டார் தயாளன். பின்னர், புதுமணத்தம்பதிக்கு மணமக்களுக்கு மருத்துவமனைக்கு வந்திருந்த பொதமக்கள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த திடீர் திருணம் பற்றிய தகவலறிந்த மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்களும் புதுமண தம்பதியினரை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு தாயிடம் ஆசீர்வாதம் வாங்க மருத்துவமனைக்கு மணமக்கள் சென்றனர்.
இதையும் படிங்க;- கணவனால் கைவிடப்பட்ட, தனியாக வாழும் பெண்களுக்கு சூப்பர் செய்தி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு.!
இருப்பினும், முத்தாலம்மாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் புதுமணத் தம்பதியை வார்டினுள் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் திருமணம் குறித்த தகவலைத் தாயிடம் தெரிவிக்குமாறு அங்கிருந்த செவிலியர்களிடம் கூறிவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மருத்துவமனையில் நடைபெற்ற இந்த திடீர் திருமணத்தால், அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், மணமக்களை அங்கு வந்த பொதுமக்கள் அனைவரும் வாழ்த்திச் சென்றனர்.