தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மணிவாசகம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் வாக்குச்சாவடியில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மணிவாசகம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
undefined
நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவாசகம் விழுப்புரம் வா.பகண்டை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். தேர்தலுக்காக விடூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை நேற்று செய்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு இரவு 1 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆசிரியர் மணிவாசகம் உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.