முக்கிய ஆலோசனை என்று கூறி பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொன்ன ராஜேஷ் தாஸ், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த பெண் எஸ்.பி ராஜேஷ் தாஸை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி 21-ம் தேதியன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் அவருடைய பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். பணி முடிந்து ராஜேஷ் தாஸ் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, தன் மாவட்டம் வழியாகச் சென்றபோது, மரியாதை நிமித்தமாகத் தன் மாவட்ட எல்லையில் நின்று பெண் எஸ்.பி. அவரை வரவேற்றுள்ளார்.
இதையும் படிங்க;- அக்காவால் நின்று போன திருமணம்.. மனவேதனையில் குன்றத்தூர் அபிராமியின் தம்பி தற்கொலை..!
இதனையடுத்து, முக்கிய ஆலோசனை என்று கூறி பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொன்ன ராஜேஷ் தாஸ், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த பெண் எஸ்.பி ராஜேஷ் தாஸை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றார். இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி திரிபாதி ஆகியோரிடம் இது குறித்துப் புகார் செய்தார். முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் உதவியாக இருந்ததாக அவர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு `உதவி' செய்த இன்ஸ்பெக்டரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. எஸ்.பி.கண்ணன் மட்டும் ஆஜராகியிருந்தார். இதையடுத்து ராஜேஷ் தாஸ் ஆஜராவாததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த நீதிபதி கோபிநாத், 15 நாள் அவகாசம் கேட்டு ராஜேஷ் தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க;- தமிழகத்தை அதிர வைத்த குன்றத்தூர் அபிராமி வழக்கு.. தற்போதைய நிலை என்ன? தீர்ப்பு எப்போது? புதிய தகவல்.!
இதையடுத்து நவம்பர் 1ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் ராஜேஷ் தாஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அன்றைய தினம் ராஜேஷ் தாஸ் ஆஜராகாத பட்சத்தில் அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.