வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!!

By manimegalai aFirst Published Oct 26, 2021, 11:20 AM IST
Highlights

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதை அடுத்து ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்டவைகளை தூா்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலத்தில் இருந்து காணொலி வாயிலாக வடக்கிழக்கு பருவமழைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதில் தலைமை செயலாளர் இறையன்பு உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனையில் அதிகம் மழை பொழிய உள்ள  மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல், மக்களுக்கான உரிய நிவாரண முகாம் அமைத்தல் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!