திருப்பரங்குன்றத்தில் நிலவுவது மதப்பிரச்சினை கிடையாது, ஈகோ பிரச்சினை.. தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

Published : Dec 19, 2025, 02:29 PM IST
Tamilisai Soundararajan

சுருக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடைபெறுவது மதப்பிரச்சினை கிடையாது அது ஈகோ பிரச்சினை. நீதிபதி மீதே குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கோவை, திருப்பூர் நகரங்களின் அடையாளம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சிலர் புதிதாக “மஞ்சள் நகரம்” என்று கூறுகிறார்கள். பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போராட்டத்தில் பூரண சந்திரன் தனது உடலில் தீயை ஏற்றிக் கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். துப்புரவு தொழிலாளர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சனை அல்ல; அது ஈகோ பிரச்சனை. இந்த விவகாரத்தில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது தவறான போக்கு. திருப்பரங்குன்றம் தூண் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் பேசுகிறார்கள்; அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண்ணாக நான் பேச முடியாது.

2026ஆம் ஆண்டு ஸ்டாலின் அரசு மக்கள் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும். “மஞ்சள் நகரம்” என்ற கருத்தை நடிகர் விஜய் முன்வைத்துள்ளார்; ஆனால் மஞ்சளுக்கான வாரியத்தை அமைத்தது மத்திய அரசு. மஞ்சள் நகரத்தில் உள்ள மக்கள் பா.ஜ.க-க்கு வாக்களிக்க வேண்டும். விஜய் 10 வயதிலிருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவை செய்துள்ள எங்களுக்கு எந்த அளவிற்கு மக்களுடன் தொடர்பு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தி.மு.க மகாத்மா காந்தியை உரிய முறையில் கொண்டாடவில்லை. அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. மகாத்மா காந்தி ஊழல் அற்றவர்; ஆனால் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்தது தமிழ்நாட்டில்தான். காந்திக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரை மாற்றி, அவை பிற்போக்கு இயக்கங்கள் என சொல்ல வேண்டும். சரஸ்வதி நாகரிகம் வரலாற்றில் உள்ளது. அ.தி.மு.க அமைச்சர்கள் பா.ஜ.க தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளமே; அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. தேர்தல் நேரம் என்பதால் வழக்குகள் போடப்படவில்லை என்றாலும், அவை எப்போதும் தொடரும். உதயநிதிக்கு புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை; எழுதித் தருபவர்கள் எதுகை, மோனையுடன் எழுதித் தருகிறார்கள். கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைத்துள்ளனர்; சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாம். “தீயசக்தி தி.மு.க” என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை. நான் அனைத்து மதங்களுக்கும் ஆதரவாக பேசுவேன்; ஆனால் பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு என அவர் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சிறையில் இருந்து வெளியே வரும் பி.ஆர்.பாண்டியன்.. வழக்கில் அதிரடி திருப்பம்.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது.. விஜய்யை சப்பையாக்கிய சேகர்பாபு..!