பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது.. விஜய்யை சப்பையாக்கிய சேகர்பாபு..!

Published : Dec 19, 2025, 02:02 PM IST
Sekar Babu

சுருக்கம்

பால்வாடி கட்சிக்கெல்லாம் பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது என தமிழக வெற்றி கழகத்தின் விமர்சனத்திற்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், “ஆளும் திமுக அரசைக் கடுமையாக சாடினார். திமுகவும், பிரச்சினைகளும் பெவிகால் போட்டு ஒட்டியது போன்று இரண்டையும் பிரிக்கவே முடியாது. திமுக எனும் தீய சக்தியை ஒழிக்க தவெக எனும் தூய சக்தியால் தான் முடியும். திமுகவை தீய சக்தி என சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 8 பள்ளிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இந்து சமய அறிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராசர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 581 மாணவியர்களுக்கும், ராமசாமி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 182 மிதிவண்டியும், மாணவிகளுக்கு 130 மிதிவண்டியும் என மொத்தம் 312 மிதி வண்டியும், முகப்பேர் அரசு பள்ளிக்கு 180 மிதி வண்டியும், கொரட்டூர் அரசு பள்ளிக்கு 80 மிதிவண்டியும், அத்திப்பட்டு அரசு பள்ளிக்கு 107 மிதிவண்டியும் என 1260 மிதிவண்டிகள் இன்று வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அசிங்கமாக பேசுவது அரசியல் என்றால் அது எனக்கு வராது உங்களை வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறேன் என மாநாட்டில் பேசியது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்,

அதே புஸ்ஸி, அதே லாட்டரி அதே பஞ்ச் டயலாக். ஊர் ஊரா போய் கூட்டம் நடத்துவது தான் தவெக. ஊர் முழுவதும் கூட்டம் நடத்துவது திமுக, பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொன்னால் நன்றாக இருக்காது என கூறி சென்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்
ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி