எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும்; தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும். அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராக உள்ளனர். அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடுதான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

03:33 PM (IST) Mar 11
நமது இலக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 40க்கு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
03:14 PM (IST) Mar 11
நாடும் நமதே, நாளையும் நமதே நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெறும் முயற்சியில் முழுமையாக இறங்க உள்ளோம் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
01:41 PM (IST) Mar 11
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
01:41 PM (IST) Mar 11
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
11:47 AM (IST) Mar 11
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
11:18 AM (IST) Mar 11
தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றைய தங்க விலை என்ன என்பதை பார்க்கலாம்.
10:49 AM (IST) Mar 11
நில மோசடி வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
10:03 AM (IST) Mar 11
12-ம் வகுப்புக்கு வரும் 13-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் தேர்வெழுதும்போது மின் தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
10:00 AM (IST) Mar 11
அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று பேசியுள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
08:41 AM (IST) Mar 11
4 மாதங்களாகச் சட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர் என்று தமிழக ஆளுநரை தாக்கி பேசியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
08:19 AM (IST) Mar 11
சென்னையில் பாஜகவின் ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்க முயன்ற மாவட்ட செயலாளரிடம் இருந்து கரு.நாகராஜன் திடீரென மைக்கை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
08:13 AM (IST) Mar 11
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பிரபாஸை முந்திக்கொண்டு அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நட்சத்திரம் ஆகியுள்ளார். இது தெலுங்கு திரையுலகத்தில் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
07:51 AM (IST) Mar 11
கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்க இருந்த நிலையில் பா.ம.கவினர் 55 பேரை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07:51 AM (IST) Mar 11
கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்க இருந்த நிலையில் பா.ம.கவினர் 55 பேரை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07:49 AM (IST) Mar 11
என்எல்சியை கண்டித்து கடலூரில் பாமக சார்பாக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
07:49 AM (IST) Mar 11
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கிருஷ்ணகிரியில் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாடிக் கொண்டிருந்த போதே கிருஷ்ணகிரி, தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஐ.டி விங் பொறுப்பாளர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:08 AM (IST) Mar 11
தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு மாவட்ட நிர்வாகியின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.