வங்கக்கடலில் டிசம்பர் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடற்கரையை நெருங்கும் போதும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

02:44 PM (IST) Dec 01
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள கோல்டு திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.மேலும் படிக்க
01:47 PM (IST) Dec 01
தமிழக அரசு சார்பாக சென்னையில் காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவை மாற்று இடத்தில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
01:11 PM (IST) Dec 01
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
12:47 PM (IST) Dec 01
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட நேரிடும் என திராவிடர் கழக தலைவர் கி வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க..
11:37 AM (IST) Dec 01
எதிர்கட்சிதலைவர் எடப்பாடியாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருப்பது அவர் வகிக்கும் பதவியின் இலக்கணத்தை இழந்துவிட்டார் என தெரிவித்துள்ள ஆர்.பி.உதயகுமார், ஜனநாயகத்தை மறந்து விட்டு சர்வாதிகார போக்கை கடைபிடித்து வரும் திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.
11:36 AM (IST) Dec 01
போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. இருப்பினும் நிதி நிலைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
11:08 AM (IST) Dec 01
தானி ஓட்டுனரின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை ஆகும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய நிகழ்வுகள் தினசரி நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் தடுக்க முடியாததாகி விடும்.
10:47 AM (IST) Dec 01
அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்ட மலைக்கா அரோரா, தற்போது அவருடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் படிக்க
10:14 AM (IST) Dec 01
தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினைப்போல திமுக அரசும் மக்களின் தகவல்களை ஒவ்வொன்றாக ஆதார் எண்ணுடன் இணைக்க கட்டாயப்படுத்துவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
10:07 AM (IST) Dec 01
கவுதம் கார்த்திக் பத்து தல பட ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் ஹனிமூன் பற்று தற்போது யோசிக்கவில்லை என்றும், கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு விடுமுறையின் போது ஹனிமூன் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் மஞ்சிமா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
09:15 AM (IST) Dec 01
கோல்டு திரைப்படம் இன்று தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இறுதியில் இன்று மலையாளத்தில் மட்டும் தான் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இதன் தமிழ் வெர்ஷன் இன்று ரிலீசாகாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
09:04 AM (IST) Dec 01
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
09:03 AM (IST) Dec 01
அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
07:38 AM (IST) Dec 01
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:38 AM (IST) Dec 01
அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதிமுக , சின்னம் தவறானவர்கள் கையில் இருப்பதை மக்கள் உணர்வார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.