டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் நியூ டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலை 3,182 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா தோற்கடித்தார்.இவர் முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் வர்மா. கெஜ்ரிவாலைத் தோற்கடித்ததால் இவர் முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

07:33 PM (IST) Feb 08
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளை வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றவில்லை.
மேலும் படிக்க: டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்கும் பாஜக! 40 தொகுதிகளில் வெற்றி!
06:16 PM (IST) Feb 08
Boy Bestie மற்றும் நாம் சொல்ல கூடிய சின்ன சின்ன வார்த்தைகள் எல்லாம் அந்த காலத்தில் இருந்தே எல்லாம் இருக்கிறது . அதற்கு நாம் பெயர் வைக்காமல் இருந்தோம் . அது அனைத்திற்கும் இப்பொழுது ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள் .
06:14 PM (IST) Feb 08
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஏற்கனவே 'விக்ரம்' படத்தில் நடித்த உலகநாயகன் கமலஹாசன், மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
06:04 PM (IST) Feb 08
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் நாதகவுக்கு பின்னடைவு அல்ல என்று கருத்து.
05:40 PM (IST) Feb 08
கிராமத்து கதைக்களத்தில் அண்ணன் - தங்கைகள் பாசத்தை எடுத்து காட்டும் விதமாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், இன்று 3 பிரபலங்கள் அதிரடியாக என்ட்ரி கொடுக்க உள்ளனர்.
04:29 PM (IST) Feb 08
Krithi Shetty First Movie Collects 100 Crores and Other Movies Flop : முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் குவித்து அதன் பிறகு நடித்த எல்லா படங்களையும் தோல்வி கொடுத்த நடிகை யார் என்று பார்க்கலாம்.
04:29 PM (IST) Feb 08
சென்னை: மத்திய பட்ஜெட்டில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்!
04:10 PM (IST) Feb 08
மஹிந்திரா XUV 400 EV: மஹிந்திராவின் மின்சார நான்கு சக்கர வாகன வரிசை இப்போது பல்வேறு மாடல்களை உள்ளடக்கியது, XUV400 நுழைவு-நிலை விருப்பமாக செயல்படுகிறது. இந்த மாதம், நிறுவனம் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
04:09 PM (IST) Feb 08
பிராமணர்களை இழிவு படுத்தும் விதமாக 'பேட் கேர்ள்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு IFFR 2025 இல் மதிப்புமிக்க NETPAC விருதை கிடைத்துள்ளது.
03:53 PM (IST) Feb 08
03:33 PM (IST) Feb 08
03:31 PM (IST) Feb 08
03:18 PM (IST) Feb 08
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் 83,191 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 17,679 வாக்குகளை பெற்றுள்ளார். சுமார் 65,512 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் வெற்றி முகத்தில் இருந்து வருகிறார்.
03:15 PM (IST) Feb 08
டெல்லியில் சட்டமன்ற தேர்தலில் பெருபான்மையான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் டெல்லியின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவோம் என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
03:13 PM (IST) Feb 08
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல ரசிகர்களின் ஃபேவரட் தொடரான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய (பிப்ரவரி 8-ஆம்) தேதி எபிசோட் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
03:12 PM (IST) Feb 08
கோலிவுட் ரசிகர்களை நடனத்தாலும், நடிப்பாலும் கட்டி போட்டு வைத்திருப்பவர் தான் அந்த டாப் நடிகர். பொண்டாட்டி இருக்கும் போதே, 40 வயசு நடிகை கூட இவர் அடிக்கும் லூட்டி பற்றி , இப்போ கோடம்பாக்கமே கிசுகிசுத்து வருது.
03:11 PM (IST) Feb 08
சீரியலில் மாமியார் - மருமகனா நடித்த இந்திரனீலும், மேகனாவும் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடமாக குழந்தை இல்லாதது பற்றியும், தற்போது குழந்தையே வேண்டாம் என முடிவு செய்துள்ளது பற்றியும் கூறி உள்ளனர்.
03:06 PM (IST) Feb 08
Venus Transit in Pisces Forms Malavya Rajayoga Palan Tamil : பிப்ரவரி 10 முதல் புதிய வாரத்தில் மீன ராசியில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.
02:37 PM (IST) Feb 08
மாருதி சுசூகி தன்னுடைய பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோவுக்கு இந்த மாதம் சிறப்பான தள்ளுபடிகளை அறிவித்துள்து. 2024, 2025 மாடல்களுக்கு முறையே ₹62,100 மற்றும் ₹55,000 வரை தள்ளுபடிகள் வங்கப்பட்டுள்ளது. தள்ளுபடி, பரிமாற்றம், ஸ்கிராப்பேஜ் சலுகைகள் இதில் அடங்கும்.
02:12 PM (IST) Feb 08
பிப்ரவரி 11ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
02:08 PM (IST) Feb 08
Naga Chaitanya Talk about Divorce With Samantha in Tamil : சமந்தா உடனான விவாகரத்து குறித்து நடிகர் நாக சைதன்யா முதல் முறையாக பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
01:49 PM (IST) Feb 08
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் சந்திரகுமார் 50,000த்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
01:48 PM (IST) Feb 08
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 64,710 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13,438 வாக்குகளை பெற்றுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 51,272 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
01:03 PM (IST) Feb 08
டெல்லி கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தற்போது 989 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி அதிஷி வீழ்த்தினர்.
12:43 PM (IST) Feb 08
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார்.
12:30 PM (IST) Feb 08
ஜங்புரா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மணிஷ் சிசோடியா தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வந்த நிலையில் தற்போது தோல்வி அடைந்துள்ளார்.
12:23 PM (IST) Feb 08
12:23 PM (IST) Feb 08
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவியும், சீரியல் நடிகையுமான சங்கீதாவுக்கு தற்போது மிகவும் எளிமையாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த சில புகைப்படங்கள் இதோ...
12:14 PM (IST) Feb 08
12:10 PM (IST) Feb 08
டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றி உறுதியானதை அடுத்து மாலை 7 மணியளவில் பிரதமர் மோடி பாஜக தலைமை அலுவலகம் செல்கிறார். 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் நிலையில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
12:05 PM (IST) Feb 08
டெல்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வருகின்றனர்.
புதுடெல்லியில் தொகுதியில் 430 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால், அதிஷி கல்காஜி தொகுதியில் 3231 வாக்குகளும், சோம்நாத் பார்தி மால்வியா நகர் தொகுதியில் 5656 வாக்குகளும், சத்யேந்தர் ஜெயின் ஷகூர் பச்தி தொகுதியில் 15745 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
12:01 PM (IST) Feb 08
Naga Chaitanya call his wife Using Nickname : திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா தனது மனைவி சோபிதா துலிபாலாவை புஜ்ஜி என்று அழைப்பது தான் வழக்கமாம். இப்போது அதே பெயரில் தான் தண்டேல் படத்தில் சாய் பல்லவியை அழைக்கிறார்.
11:59 AM (IST) Feb 08
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக பெருபான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதை தொடர்ந்து, பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11:52 AM (IST) Feb 08
11:52 AM (IST) Feb 08
இந்தியாவின் தலைநகரை வெல்லப்போவது யார்?
மேலும் படிக்க
11:29 AM (IST) Feb 08
டெல்லி கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி முன்னிலையில் இருந்து வந்தத நிலையில் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார். சுமார் 2000க்கும் மேற்பட்ட வாக்குகளுடன் பின்னடைவு.