தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் திரு. அஸ்வத்தாமன் அவர்கள் இன்று சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் அஸ்வத்தாமன் இதற்கு முன்னதாக மாணவர் காங்கிரஸ் தலைவராக பதிவு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெங்களூரில் இருந்து தனது காரில் அவர் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, ஆவடி சரக போலீசார் அவருடைய காரை வழிமறித்து அதில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில், அஸ்வத்தாமன் வந்த அந்த காரில், உரிமம் இல்லாத துப்பாக்கி ஒன்றும், சில தோட்டக்கலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த காரில் இருந்த அஸ்வத்தாமன் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட மூன்று பேரும் அதன் பிறகு கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது.
டாஸ்மாக் கடையில் ரத்த வாந்தி எடுத்து சுருண்டு விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இந்நிலையில் ஆவடி சிறக போலீசார், காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் காங்கிரஸில் முக்கிய பதவியில் இருக்கும் திரு. அஸ்வத்தாமன் உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளது தற்பொழுது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மிக மிக முக்கிய பதவியில் இருக்கும் ஒரு நிர்வாகி, உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளது, கட்சியினர் மத்தியில் பல கேள்விகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தென் மாவட்ட மக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஸ்டாலின்.. திமுகவை வெளுக்கும் ஆர்.பி.உதயகுமார்