தமிழகத்தில் ஹுக்கா பார் திறக்க தடை.. தமிழக அரசு அதிரடி - மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

Ansgar R |  
Published : Aug 05, 2023, 06:06 PM IST
தமிழகத்தில் ஹுக்கா பார் திறக்க தடை.. தமிழக அரசு அதிரடி - மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

சுருக்கம்

உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் ஹூக்கா பார்களுக்கு தடை விதிப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், சிகரெட் மற்றும் புகையிலையை ஒழிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டத்தின் (COTPA) கீழ், ஹூக்கா பார்களை முடக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் குடும்ப நலத்துறை இந்த மசோதாவை முன்னெடுத்த நிலையில் அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகையால் இனி தமிழகத்தில் எந்த பகுதியில் உணவு விடுதிகளிலோ அல்லது எந்த விதமான மக்கள் கூடும் பகுதிகளிலோ உக்கா பார் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி தள்ளுபடி துணி கடையில் அல்ல; காய்கறி கடையில் - அதிரடி அறிவிப்பால் குவிந்த பொதுமக்கள்

மேலும் தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு ஹூக்கா பார்களில் இருந்து பொருட்களையும்பறிமுதல் செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் தடையை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 50000 வரை அபராதம் விதிக்கப்படும். 

இந்த மசோதாவை ஆதரித்து பேசிய சுகாதார அமைச்சர் மகாசுப்ரமணியன் அதில் உள்ள பல நிறைகளை சுட்டிக்காட்டினார். அதேபோல சந்தேகத்திற்கு இடமான சில உணவகங்கள் மற்றும் பிற இடங்களில், அடிக்கடி சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை.. கைப்பற்றப்பட்டவை என்னென்ன தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்