செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை.. கைப்பற்றப்பட்டவை என்னென்ன தெரியுமா?

Published : Aug 05, 2023, 05:47 PM IST
செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை.. கைப்பற்றப்பட்டவை என்னென்ன தெரியுமா?

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பொருட்கள், பணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது.

பரமத்தி வேலூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீட்டில் மத்திய அமலாக்கத் துறையினர் திடீர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே மத்திய அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

ஏற்கனவே அவரது நெருங்கிய ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், மத்திய அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கிடைத்த ஆதாரங்கள் மூலம் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

பின்னர் அவர் அங்கிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 3ம் தேதி, மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், ரூ. 22 லட்சம் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத  ரூ. 16.6 இலட்சம்  பொருட்கள், நிலங்கள் தொடர்பான சந்தேகத்திற்குரிய 60 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவுற்ற நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மேற்கொண்ட சோதனையில்  ரூ. 22 லட்சம் கைப்பற்றபட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்