ஆடி தள்ளுபடி துணி கடையில் அல்ல; காய்கறி கடையில் - அதிரடி அறிவிப்பால் குவிந்த பொதுமக்கள்

By Velmurugan s  |  First Published Aug 5, 2023, 5:15 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறி கடை உரிமையாளர் ஒருவர் தக்காளியை ஆடி தள்ளுபடி என்ற பெயரில் ரூ.60க்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.


திண்டுக்கல் நகர் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் (நாட்டு காய்கறிகள் இங்கிலீஷ் காய்கறிகள்) காய்கறிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவதால் திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். 

இந்த காந்தி காய்கறி மார்க்கெட்டில் உள்ள மொத்த தக்காளி வியாபார கடையை ஒன்றில் அதிரடி ஆடி ஆபர் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆந்திரா, கர்நாடகா, ஓசூர் மழை காரணத்தினாலும்  மற்றும் தமிழகத்தில் போதிய தக்காளிகள் இல்லாத காரணத்தினால் ஒரு மாத காலமாக தற்காலியின் விலை 120 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் சென்ற வாரம் இந்த மொத்தக்கடை உரிமையாளர் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக 5 டன் தக்காளிகளை  60 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.

Tap to resize

Latest Videos

undefined

என்.எல்.சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் - அன்புமணி எச்சரிக்கை

ஆடி மாதம் என்றாலே நகைகளுக்கு தள்ளுபடி, துணிக்கடைகளில் தள்ளுபடி என்று தான் கேள்விப்பட்டிருப்போம். திண்டுக்கலில் முதல்முறையாக ஆடித்தள்ளுபடியாக தக்காளி ஒரு கிலோ ரூபாய் 60க்கு விற்ப்பனை. அதே போல் இன்று தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் 8 டன் தக்காளிகளை மொத்த  வியாபாரம் செய்யாமல் ஒரு நபருக்கு இரண்டு கிலோ வீதம் தக்காளிகளை ஆடி மாத தள்ளுபடியாக குறைந்த விலைக்கு விற்பனை செய்தார். 

ஆடி திருவிழாவை முன்னிட்டு தேனி சுயம்பு சனீஸ்வர பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்

மேலும் அவர் கூறுகையில் தக்காளி  விலை சராசரியாக 50 ரூபாய்க்கு கீழ் குறைந்து  விற்பனையாகும் வரை ஆடி மாதத்தில் வாரம் ஒரு முறை பொது மக்களுக்காக 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். என்று கூறி உள்ளதால். பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் காலை 5 மணியிலிருந்து நீண்ட வரிசையில் நின்று தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். தக்காளி விலை சராசரி நிலைக்கு வரும் வரை இந்த விற்பனையானது வாரம் ஒரு முறை விற்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியுடன் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர் .

click me!