வேலை தேடிச் ஈராக் சென்ற தமிழருக்கு டார்ச்சர்... மனைவிக்கு வீடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை

By SG Balan  |  First Published Aug 2, 2023, 9:42 AM IST

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டுக்கு வேலை தேடிச் சென்ற சின்னய்யா அங்கு சிலர் தன்னை டார்ச்சர் செய்கிறார்கள் என்று வீடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார்.


திண்டுக்கல் நத்தத்தைச் சேர்ந்த 45 வயது கட்டிடத் தொழிலாளி ஈராக்கில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது மனைவி உள்ளூர் தாசில்தாரிடம் மனு அளித்து, அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவுமாறு மாநில அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். கோகிலா தனது கணவர் சின்னையாவின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் தன் மனுவில் கூறியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா. கட்டுமானத் தொழிலாளியான இவர், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டுக்கு வேலை தேடிச் சென்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

"திங்கட்கிழமை இரவு என் கணவரிடம் பேசினேன், அவர் நலமாக இருப்பதாகத் தோன்றியது. மறுநாள், அதிகாலை 4 மணியளவில் அவர் எனக்கு வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பியிருப்பதைக் கண்டேன். அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரிந்தது. குடும்பத்தை கவனித்துக்கொள்ளும்படி என்னிடம் கூறினார். சிலர் தன்னை மனரீதியாக துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்” என கோகிலா சொல்கிறார்.

கிருஷ்ணராஜசாகர் அணையில் நிரம்பிய 35 டி.எம்.சி. தண்ணீர்... தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் எப்போது கிடைக்கும்?

வீடியோ மெசேஜைப் பார்த்துவிட்டு கோகிலா தன் கணவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. பின்னர் கோகிலா ஈராக்கில் உள்ள மற்றொரு தொழிலாளியை அணுகினார். "ஆரம்பத்தில், நடந்ததை பற்றி யாரும் சரியாக பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, என் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று சொன்னார்கள்" என்கிறார் கோகிலா.

சின்னையா அனுப்பிய வீடியோ செய்தியில், தமிழகம் மற்றும் பிற (இந்திய) மாநிலங்களைச் சேர்ந்த சிலர் தன்னை சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் மிரட்டி வருவதால், இனி உயிர் வாழ முடியாது என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக ஊடக தளங்களில் பகிர்ந்த நபர்களின் பெயரையும் அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், சின்னையாவின் உடலை திண்டுக்கல்லுக்கு கொண்டுவர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என நத்தம் தாசில்தாரிடம் கோகிலா செவ்வாய்க்கிழமை மனு அளித்திருக்கிறார். "மனுவைப் பெற்றுக்கொண்டோம். மேல் நடவடிக்கைக்காக எடுக்க உரிய உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்'' என தாசில்தார் ராமையா தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் வைத்த கண்கூச வைக்கும் X விளக்கு... கடுப்பாகி ஆப்பு வைத்த அமெரிக்க மக்கள்!

click me!