திண்டுக்கல் மாவட்டத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் தனது சேமிப்பு பணத்தை எடுத்துக்கொண்டு மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றதால் விரக்தி அடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). சொந்தமாக சரக்கு வாகனம் வைத்துக்கொண்டு வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (வயது 25) என்ற பெண்ணுடன் காதல் திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த ஒரு மாதமாக வேடசந்தூரில் உள்ள உசேன் ராவுத்தர் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
undefined
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வினோதினி கிருஷ்ணமூர்த்தியிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி தனியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை 11 மணியளவில் தனது தந்தையிடம் செல்போனில் பேசியுள்ளார்.
பொள்ளாச்சியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி கை துண்டான நிலையில் உயிரிழப்பு
அதன் பின்னர் அவரது தந்தை பலமுறை தொடர்பு கொண்டும் செல்போன் எடுக்காததால் வாடகை வீட்டிற்கு தேடிவந்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாத நிலையில், அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் நூல் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து தொங்கிய நிலையில்கண்டதும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன்.
வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது செல்போனில் தனது இறப்பிற்கான காரணம் குறித்து பேசி ரெக்கார்டு செய்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலப்பு திருமணம் செய்த பெண்ணை அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்ட சமூகத்தினர் தகராறு - கடலூரில் பரபரப்பு
அதில் தனது மனைவி வினோதினி 3 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். இதனால் தனது தம்பிக்கு கால்குலேட்டர் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை என தனது மனதில் உள்ளதை வெளிப்படுத்தி கண்ணீர் சிந்தி பேசியுள்ளார். மேலும் தனது பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், தன்னை தனது தாயும், தம்பியும் மன்னித்துக் கொள்ளும்படியும் தேம்பி தேம்பி அழுதுகொண்டே பேசியுள்ள வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.