திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அணைப் பட்டி சாலையில் உள்ள ஸ்ரீராஜ ராஜேஸ்வரி கோவிலில் காலை முதல் ஆடிப்பெருக்கு திருவிழா மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி கோயில் திருவிழாவில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அணைப் பட்டி சாலையில் உள்ள ஸ்ரீராஜ ராஜேஸ்வரி கோவிலில் காலை முதல் ஆடிப்பெருக்கு திருவிழா மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. நேற்று இரவு தனியார் விளம்பரதாரர்கள் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இரவு 7 மணிக்கு தொடங்கிய கலை நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் ஆபாச உடை அணிந்து ஆடத் தொடங்கினர்.
இதையும் படிங்க;- ஆகஸ்ட் 9ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு..!
தொடர்ந்து அனைத்து பாடல்களிலும் ஆபாச நடன அசைவுகளுடன் இரட்டை அர்த்தம் உள்ள வசனங்களை பேசி குத்தாட்டம் போட்டனர். இதைப் பார்த்த பெண்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நடனமாடினர். இந்த ஆபாச நடனங்களை பார்த்தவாறு மேடை முன்பு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விசில் பறக்க ஆட்டம் போட்டது வேதனையின் உச்சமாகும்.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை.. எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவிழாவில் ஆபாச உடை அணிந்து குத்தாட்டம் போடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆபாச நடனமாடிய பெண்களை வேடிக்கை பார்த்த நிலக்கோட்டை காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.