டெல்லியில் MPகள் போராட்டம்.. நிதி ஆயோக்கை புறக்கணிக்கும் தமிழகம் - ஸ்டாலின் அதிரடி!

By Ansgar R  |  First Published Jul 23, 2024, 8:11 PM IST

CM Stalin : இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் இல்லாதது குறித்து, அதிருப்தி தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அதில் தமிழகத்துக்கென்று பிரத்தியேகமாக எந்த ஒரு நிதி ஒதுக்கீடோ அல்லது புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்போ வெளியிடப்படவில்லை. இது தமிழக அளவில் பெரும் அதிருப்தியை உண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே சமயம் மத்தியில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்க, மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு சில மாநிலங்களுக்கு கூடுதலான நீதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆந்திர மாநில தலைநகர் அமராவதியின் கட்டமைப்பிற்காக சுமார் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. 

Latest Videos

undefined

நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் இது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..

இந்நிலையில் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதை போல மத்திய அரசு நடத்த உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் புறக்கணிக்க உள்ளதாக கூறியிருக்கிறார். 

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தான் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ள நிலையில், தான் அதை புறக்கணிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார். மேலும் டெல்லியில் உள்ள நமது எம்பிக்கள், இந்த பட்ஜெட்டை எதிர்த்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், அதற்கு தான் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிய மத்திய அரசு; பட்ஜெட்டில் 0/0 !! பீகார், ஆந்திராவிற்கு கொட்டிக்கொடுத்த பாஜக

click me!