இப்படியே போச்சுனா! தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும்! பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

Published : Feb 21, 2025, 05:17 PM ISTUpdated : Feb 21, 2025, 05:20 PM IST
இப்படியே போச்சுனா! தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும்! பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

சுருக்கம்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்தார். அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், பெற்றோர்கள் குழந்தைகளை கொள்வது என ஏராளமானவானவை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சால்வை போட முயன்ற நிர்வாகி.! தடுத்து தூக்கி எரிந்த கே.பி.ராமலிங்கம்- பாஜக ஷாக்

குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இதனை பொருட்டாக அரசு எடுக்கவில்லை யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இவ்வாறு போனால் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும். உலக நாடுகள் இவ்வாறு பேச ஆரம்பித்து விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு வர பயப்படுவார்கள். 

இதையும் படிங்க: அதிபரே சொல்லிட்டாரு! மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பகீர்!

இந்த நிலையிலிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொறுப்பு இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை போக்சோ நாடு தான் தேவை என்றால் போக்சோ நாட்டினுடைய முதலமைச்சராகவும், அமைச்சராகவும், இந்த காவல்துறையால் பெருமைப்படுகிறது என்று சொன்னால் 2026 நெருங்குவதற்கு உள்ளாக இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்.

இதையும் படிங்க: கெட் அவுட் மோடி.. கெட் அவுட் ஸ்டாலின்.! போட்டி போட்டு ட்ரெண்ட் ஆக்கும் திமுக- பாஜக

நரேந்திர மோடி ஆளுமைக்கு கீழ் வந்த பின்பு தான் கொலைகள் நடப்பது இல்லாமல் போனது. தமிழக அரசு மீனவர்கள் பிரச்னையை கனிவுடன் அணுக வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால்  இலங்கைக்கும் பாதிப்பு நமக்கும் பாதிப்பு என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்