TN government transfer counselling 2023; ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - முழு விவரம் உள்ளே

Published : May 29, 2023, 10:12 AM ISTUpdated : May 29, 2023, 10:20 AM IST
TN government transfer counselling 2023; ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - முழு விவரம் உள்ளே

சுருக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 8 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதற்காக ஏற்கெனவே ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழலில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது. இதற்கிடையே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. எனினும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ரகசியத்தை உங்களுக்கு சொல்வேன் - சரத்குமார் பேச்சு

ஆனால், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு  26ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது. அதன்படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்றும், இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நாளையும் நடைபெற உள்ளது.

அமைச்சர் மனோ தங்கராஜை கைது செய்து சிறையில் அடைங்க..! பாஜக திடீர் போர்கொடி... என்ன காரணம் தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S