வேலூர் அருகே குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி விஜி. இவருக்கு பிரியா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தபோது தனுஷ்காவை நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது.
இதையும் படிங்க: வரும் 1-ம் தேதி வரை கனமழை பெய்யும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா? வானிலை மையம் தகவல்
undefined
இதையடுத்து குழந்தையை அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமானதால், பாதி வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த வந்த போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கு... கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது!!
பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றபோது, சாலை வசதி இல்லாததால் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டனர். இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று, பின்னர் கால்நடையாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெற்றோர் குழந்தையின் சடலத்தை தூக்கி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.