அக்னிபத் என அரசு செலவில் ஆயுதப் பயிற்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ்...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விமர்சனம்

By Ajmal KhanFirst Published Jun 19, 2022, 5:01 PM IST
Highlights

 இளைஞர்களை படிப்பறிவு இல்லாமல் ஆக்கும் திட்டம் தான் அக்னிபத் திட்டம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு விமர்சித்துள்ளது. 
 

ராணுவத்தின் கட்டமைப்பு சீர்குலையும்

மத்திய  அரசு அக்னிபத் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 17 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த ஊழியர்களாக பணி செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 இரயில்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 200க்கும் அதிசுமான இரயில்கள் ரத்து செய்யப்பட்டு இரயில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த திட்டம் தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொன்னான திட்டம் என பாஜக இதைச் சொல்லிக் கொண்டாலும் ஓட்டைகளும், ஆபத்துகளும், இத்திட்டத்தின் பின்னணியில் உள்ளதாக கூறியுள்ளது.  பொதுவாக இராணுவ வீரர்கள் நிரந்தரப்பணி என்ற அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். ஆனால் அக்னியத்
திட்டத்தின் படி 4 ஆண்டுகள் ஒப்பந்தப்பணி வீரர்களால் இராணுவத்தின் கட்டமைப்பு சீர்குலைந்து போகும் என தெரிவித்துள்ளார். இராணுவத்தில் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர், 

அரசு செலவில் ஆயுத பயிற்சி

பொதுவாக 17 வயது முதல் 21 வயது வரை உள்ள பருவம் என்பது இளைஞர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர் கல்வியை நாடும் முக்கியமான கால கட்டமாகும், இக்காலகட்டத்தில் 4 ஆண்டுகள் இராணுவ பணிக்கு சென்று இளைஞர்கள் உயர் படிப்பு படித்து விடக்கூடாது என்பதற்காகவே பாஜக இத்திட்டத்தை கொண்டு வருவதாக பல்வேறு அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இராணுவ பயிற்சி பெற்றதை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வது? அவர்களின் எதிர்காலம் என்னாவது? விபரீதங்கள் நிறைந்த திட்டம்,  ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் அரசு செலவில் தங்கள் வகையறாக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அதன் மூலம் சமூகத்திற்கு கடும் கேடுகளை விளைவிப்பதற்கான அபாயங்களும் இதன் பின்னணியில் உள்ளது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றன. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் இத்திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதுடன், இளைஞர்களை படிப்பறிவற்றவர்களாக ஆக்கி வன்முறை பாதைக்கு அழைத்துச் செல்ல துடிக்கும்  பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தவ்ஹித் ஜமாத் தெரிவித்துள்ளது.

click me!