சிறுமியை சீரழித்தது எப்படி? தலை சுற்ற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்

Published : Jul 27, 2025, 01:21 PM IST
gummidipoondi

சுருக்கம்

கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு, சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு அருகே வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்த பிறகு தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

வடமாநில வாலிபர்

அப்போது அந்தச் சிறுமியை ஒரு வடமாநில வாலிபர் பின்தொடர்ந்து, தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிறுமிக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பிறகு பொன்னேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

சிசிடிவி உதவியுடன் விசாரணை

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காண முயன்றனர். கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அழுத்தத்தால், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிப்பு

10 நாட்கள் தொடர்ந்து நடந்த விசாரணையின் பின்னர், குற்றவாளியின் தகவல் வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். டிஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படை போலீசார் சூலூர்பேட்டை, நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் ரகசியமாக கண்காணிப்பு செய்தனர்.

சந்தேகத்துக்கிடமான நபர் கண்டுபிடிப்பு

சென்னை புறநகர் ரயிலில் நெல்லூர் நோக்கி பயணித்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கண்காணித்தனர். கஞ்சா போதையில் இருந்த அந்த நபரை ரயிலில் படம் பிடித்து, மேலதிக உறுதிப்படுத்தல் பிறகு சூலூர்பேட்டையில் கைது செய்தனர்.

ராஜு பிஸ்வகர்மா கைது

கைதான நபர் ராஜு பிஸ்வகர்மா (வயது 35) என்பவராகும். நேபாளத்தைச் சேர்ந்த இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள தாபாவில் வேலை செய்துவருகிறார். போலீசார் விசாரணையில், இவரது பழக்கவழக்கங்கள் மற்றும் பல இளம்பெண்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

நீதிமன்றம் நடவடிக்கை

பின்னர் ராஜு பிஸ்வகர்மாவை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உமா மகேஷ்வரி, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்