
Bomb Threat To CM Stalin and TVK Vijay's House: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னை ஆழ்வார்பேட்டை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதேபோல் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவலர் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி
இதனைத் தொடர்ந்து விஜய் வீட்டுக்கும் சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வெடிகுன்டு ஏதும் சிக்கவில்லை. ஆகவே இது வெறூம் புரளி என்பது தெரியவந்தது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்த மோடி, இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார்?
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் விட்டுக்கும், தவெக தலைவர் விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையின் முக்கியமான இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.