இந்தியாவின் 2ஆவது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

By Manikanda Prabu  |  First Published Jan 30, 2024, 4:17 PM IST

இந்தியாவின் 2ஆவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்


 தமிழகத்தை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.

அந்த வகையில், ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் அந்நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின் தலைமை இயக்குநர், ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர், ஸ்பெயின்-இந்தியா கூட்டமைப்பின் தலைவர், Guidance தமிழ்நாடு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும்  கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

DMDMK vs DMK : பிரேமலதா விஜயகாந்தை வீட்டிற்கே சென்று சந்தித்த கனிமொழி... காரணம் என்ன.?

தமிழ் மொழியில்தான் திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார். அத்தகைய அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து தான் வந்துள்ளாதாகவும், உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியான ஸ்பானிஷ் மொழி போலவே தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருப்பதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “காளை அடக்குதல் விளையாட்டு, ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் சின்னமாக, உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.” என்றார். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருப்பதாகவும், வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனைப் பார்க்கலாம் எனவும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 6 தொகுதிகள் கேட்கும் மதிமுக!

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும்.

130க்கும் மேற்பட்ட “ஃபார்ச்சூன் 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம்.” என தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஸ்பெயின் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

click me!