மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 6 தொகுதிகள் கேட்கும் மதிமுக!

By Manikanda Prabu  |  First Published Jan 30, 2024, 3:48 PM IST

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் கேட்டு அதில் இரண்டு தொகுதிகளை பெற மதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


மத்தியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு முறை ஆட்சியில் உள்ள பாஜக, இந்த முறை ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.

அதேசமயம், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் இருந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி, இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்து விட்டது.

Tap to resize

Latest Videos

அதேபோல், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆம் ஆத்மியும் பஞ்சாபில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை.? தமிழக தேர்தலில் களம் இறங்குகிறார்.! எந்த தொகுதி தெரியுமா.?

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தியா கூட்டணியின் முக்கிய மாநிலக் கட்சியாக ஆளுங்கட்சியான திமுக உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,  மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே அவ்வப்போது உரசல் போக்கு நிலவினாலும் மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் இரு கட்சிகளுக்கு இடையேயும் கூட்டணி சுமூகமாகவே உள்ளது. 

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக ஏற்கனவே மக்களவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என மூன்று குழுக்களை திமுக அமைத்துள்ளது. தொகுதி பங்கீடுக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பும் 6 தொகுதிகளில் பட்டியலை அக்கட்சியிடம் வழங்க மதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 6 தொகுதிகள் கேட்டு அதில் இரண்டு தொகுதிகளை பெற மதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் மதிமுகவின் விருப்ப தொகுதிகளாக உள்ளன. இதில், விருதுநகர், ஈரோடு ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்டு பெற மதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவு!

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உட்பட இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவின் கணேசமூர்த்தி எம்.பி.யாக உள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். எனவே, இந்த முறை இரண்டு தொகுதிகளை கேட்டு இரண்டிலுமே பம்பரம் சின்னத்தில் போட்டியிட மதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

click me!