பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா; கண்கவர் பலூன்களை பார்த்து ரசித்த பொதுமக்கள்

By Velmurugan sFirst Published Jan 13, 2023, 11:43 AM IST
Highlights

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் இன்று தொடங்கிய சர்வதேச பலூன் திருவிழாவில் 8 நாடுகளில் இருந்து 10 பிரமாண்ட வெப்ப பலூன்கள் இன்று பறக்க விடப்பட்டன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு சுற்றுலா துறை தனியாருடன் இணைந்து இந்த பலூன் திருவிழாவை முதல்முறையாக நடத்துகின்றது. இன்று துவங்கி வரும் 15 ம் தேதி வரை இந்த பலூன் திருவிழா நடைபெறும் பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, அமெரிக்கா,பிரேசில், கனடா உள்பட 8 நாடுகளில் இருந்து பத்து வெப்ப பலூன்கள் பறக்க விடப்படுகின்றன.

60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள் இந்த  திருவிழாவில் பறக்கவிடப்பட்டன. பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு காலை 6.30 மணி முதல்  காற்று அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பலூன்கள் பறக்க விடப்பட்டன. இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சமீரன் அதிகாலையிலேயே பொள்ளாச்சி வந்து பலூன்கள் பறக்கும் நிகழ்வுகளை பார்வையிட்டார். 

குடிநீரில் மலம்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள மிரட்டுவதா? ரஞ்சித் ஆவேசம்

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், உலக நாடுகளில் இருந்து  பலூன்களும், மாலுமிகளு வந்திருக்கின்றனர். 8 நாடுகளில் இருந்து 10  பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. இந்த பலூன் திருவிழா காட்சிக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி, தமிழ்நாடு அரசு சுற்றுலாதுறை சார்பில் நடத்தபடுகின்ற நிகழ்வு எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர்.

கலாசாரம், பண்பாடு போன்றவற்றை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பின்னர், இந்த நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடத்தப்படுகிறது. காற்றின்வேகம், சமதளம், இயற்கை சூழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரவில் உணவகத்தின் கூரையை பிரித்து பணம் திருடும் பெண்கள்: சிசிடிவி காட்சியில் வெளியான உண்மை

இந்த நிகழ்ச்சியின் மூலம் இதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு வெளிநாட்டு பயணிகள் செல்வதால், அந்த பகுதிகளும் பொருளாதார ரீதியில் மேம்படும் என்றார். முதல்முறையாக பலூர் திருவிழாவை நேரில் பார்த்த பொது மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர்.

click me!