5 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலங்களில் உள்ளீர்களா..? உங்களுக்கு பட்டா ரெடி..! தமிழக அரசு அதிரடி..!

By thenmozhi gFirst Published Dec 26, 2018, 4:16 PM IST
Highlights

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு  புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலங்களில் உள்ளீர்களா..?

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு செய்து உள்ளது. இது குறித்து வருவாய்த்துறை அரசாணை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் 1,26,066 இடங்களுக்கு பட்டா வழங்க முடிவு  செய்யப்பட்டு  உள்ளது.

பட்டா பெற கட்டுப்பாடுகள் இதுதான்..! 

5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத இடங்களில், வசித்து வரும் ஏழை - எளிய மக்களுக்கு, பட்டா வழங்கப்படும். பட்டா பெற விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் அந்த இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து இருந்திருக்க வேண்டும்.

அதே சமயத்தில், நீர் நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் குடியிருப்பவர்கள், பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர், இதனை சரிபார்த்து புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்ட வழங்க உள்ளதாக வருவாய் துறை தெரிவித்து உள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவால், தமிழம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் இந்த முடிவிற்கு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  

click me!