தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று பெருமை சேர்க்கும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசாணை தெரிவிக்கிறது.
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வெல்வோருக்கு தமிழ்நாடு அரசு அதிக ஊக்கத்தொகை வழங்க உள்ளது.
2019ஆம் ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
undefined
அந்த அரசாணையில் ஒலிம்பிக் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைகழங்களுக்கிடையேயான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு ஊக்கத்தொகை வழங்குவது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி ஆவது தான் லட்சியமா? 10ஆம் வகுப்பில் இருந்தே திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்!
அதில், தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம்பெறவில்லை. தற்போது மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றால் உயரிய ஊக்கத்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசாணையின்படி, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றால், அவர்களுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கப்படும். இளையோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றால், முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் ஊக்கத்தொகையாகக் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அரணாணை பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் மாற்றுத் திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் என்று தமிழக அரசு கருதுகிறது.
வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 9 தொழிலாளர்கள் பலி; 2 பேர் நிலை கவலைக்கிடம்