₹199, ₹499, மற்றும் ₹999 என மூன்று விலைகளில் இந்த தொகுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளி சந்தையை விட 20% வரை தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும்.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு
கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகைகாண சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சிறப்பு அங்காடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். 199 ரூபாய் இனிப்பு பொங்கல் தொகுப்பில் 7 பொருட்களும், 499 ரூபாய் கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பில் 19 பொருட்களும், 999 ரூபாய் மதிப்பிலான பெரும் பொங்கல் தொகுப்பில் 35 பொருட்களை கொண்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படவுள்ளது. வெளி சந்தையை விட அனைத்து பொருட்களும் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
undefined
பட்டாசு விற்பனை
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை அதிரசம், முறுக்கு போன்ற பொருள்கள் செய்ய விற்பனை தொகுப்புகள் வைக்கப்பட்டன எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக கூட்டுறவுத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்ட பட்டாசுகளை பொறுத்த வரை 21 கோடி வரை விற்பனையாகி இருக்கிறது என தெரிவித்தார். பொங்கல் தொகுப்பில் பனை வெல்லம் சேர்க்க வேண்டும் என கோரிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், சர்க்கரை பொங்கலை பொருத்தவரை பனை வெல்லம் பயன்படுத்தப்படாது என கூறினார்.
பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது.?
ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என கூறியவர் சென்ற ஆண்டு போல் கரும்பு பரிசுத்தொகுப்பில் இடம்பெறும் என தெரிவித்தார். வேளாண் துறை, வருவாய்துறை, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அந்தந்த மாவட்டத்தில் எவ்வளவு கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது என்று பேசப்பட்டு ஒரே விவசாய இடம் கரும்புகளை மொத்தமாக வாங்குவது நன்றாக இருக்காது என்பதால் பரவலாக தேவைக்கேற்ற கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலைக் கடைகளில் 3,440 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 6 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணி நியமன ஆணை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.