Rotten Eggs in Government Schools: தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்த்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
undefined
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மீண்டும் ஒருமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு, மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது Disaster model திமுக அரசு. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது, தமிழகப் பள்ளிகளில் இது நிகழ்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக, பாரதப் பிரதமர் மோடி அரசு வழங்கும் நிதி, எங்கு செல்கிறது?
மீண்டும் ஒருமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு, மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது Disaster model திமுக அரசு. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது, தமிழகப் பள்ளிகளில்… pic.twitter.com/MXzqAQNrUl
— K.Annamalai (@annamalai_k)
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கு தரமற்ற முட்டைகள் கொடுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் பொறுப்பான அழுகிய முட்டை அமைச்சர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை, அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும். இனியும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், திமுக அரசுக்கு, பெற்றோர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
ஆனால் இதனை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். டிசம்பர் 16-ம் தேதி பள்ளிக்கு வழங்கப்பட்ட 197 முட்டைகளில் உடைந்து, அழுகிய 5 முட்டைகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.