ஜூலை 11ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல், கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து படிப்படியாக குறைந்து வந்ததால் மார்ச் 31 உடன் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் அனைத்து மதம் சார்ந்த திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாவட்டங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களுக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காந்தி அம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இந்த நெல்லையப்பர் கோயில், புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேலும் காந்திமதி அம்மை வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். இந்த திருத்தலத்தில் காந்திமதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அத்துடன் இத்திருத்தலம் அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது.
மேலும் செய்திகளுக்கு.. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுக்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?
மேலும் ஆண்டுதோறும் புரட்டாசி மாத இறுதியில், ஐப்பசி மாதத் தொடக்கத்தில், காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தலத்தின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. அத்தகைய தேர் திருவிழா வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !